• Sat. Apr 20th, 2024

உதகை -மைசூர் நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க புதிய தொழில்நுட்பம்-அமைச்சர் ஏ.வ.வேலு

விபத்துக்களை தடுக்க உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் விபத்துக்களை தடுக்க ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் வாய்ந்த ரோலர் கிராஷ் பேரிங் எனப்படும் தடுப்பு வளையங்களை சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மலைப்பாதைகளில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி விபத்துக்களை குறைக்க தடுப்புகள் அமைக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெப்பக்காடு பகுதியில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி…
மலைமாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்து உள்ள தமிழ் நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் உதகையில் இருந்து மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.


ஆய்வின்போது கல்லட்டி மலைப் பாதையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் விபத்துகளை தடுக்க ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ரோலர் கிராஷ் பேரிங் எனப்படும் தடுப்பு வளையங்களை கல்லட்டி மலைப்பாதையில் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் விபத்துக்குள்ளாவை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்க் கொண்டனர். இதனை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மையப்பகுதிகளாக அமைந்துள்ள தெப்பக்காடு பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நுற்றாண்டை கடந்த பாலம் பழுதடைந்ததால் அதை புதிதாக இடித்து கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதனையும் ஆய்வு மேற்க் கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பருவமழை தூங்குவதற்கு முன் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பாலத்தை கட்டி முடிக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், கடந்த ஆட்சியில் வனப்பகுதியில் அமைந்துள்ள மக்கள் பயன்படுத்தி வந்த சாலைகளை புதுப்பிக்காமலும்,புதிய சாலைகளை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த காலங்களில் போடப்படாத அனைத்து சாலைகளும் முறையாக டெண்டர் விடப்பட்டு, தற்போது இந்த சாலைகள் அனைத்தும் வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் போடப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், நீலகிரி மாவட்ட கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *