• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாடுபிடி வீரருக்கு பண்பாட்டு பாராட்டு விழா நடத்திய அமெரிக்க, டெக்ஸாஸ் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை…

ByG.Suresh

Jan 23, 2024

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக்கான தனி இருக்கை அமைத்து கொடுத்த ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை – டெக்ஸாஸ் என்ற அமைப்பின் சார்பாக பண்பாட்டு பாராட்டு விழா நாட்டரசன் கோட்டையில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை – டெக்ஸாஸ், அமெரிக்கா அமைப்பின் சார்பாக முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு நாட்டுமாடு பசுவும் கன்றும் வழங்கப்பட்டு வருகின்றது. நான்காம் ஆண்டாக இன்று நாட்டரசன் கோட்டையில் அவ்வமைப்பின் தலைவர் ஷாம்கண்ணப்பன் அவர்கள் KNMN இல்லத்தில் இவ்வாண்டிற்கான பண்பாட்டு பாராட்டு விழா நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை தழுவி இந்த ஆண்டிற்கான தமிழக அரசால் முதல்பரிசு பெற்ற வீரராக அறிவிக்கப்பட்ட கருப்பாயூரணி கார்த்திக். அவருக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவருக்கு தமிழ்ப்பண்பாட்டினை மெய்ப்பிக்கும் வகையில் அவரது குழுவினருடன் நேரடியாக அழைத்து நாட்டுமாடு பசுவும் கன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை – டெக்ஸாஸ், அமெரிக்கா அமைப்பின் தலைவர் தலைமை தாங்கினார். சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடு ஆய்வுகள் இருக்கை செயலாளர் பெருமாள் அண்ணாமலை, பள்ளி பொருளாளர் கலைக்குமார், கருப்பாயூரணி முனியசாமி, மீனாட்சி அக்ரோ மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக அரசால் முதல்பரிசு அறிவிக்கப்பட்ட வீரர் கார்த்திக் அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பினரால் நடத்தப்பட்ட விழாவினை தமிழார்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.