• Sun. Apr 28th, 2024

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, ராம ராஜ்ஜியத்திற்கு வழிவகுக்கும் – முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மதுரை விமான நிலையத்தில் பேட்டி…

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு:

500 ஆண்டுகால போராட்டம் இறுதியாக வெற்றியில் முடிந்துள்ளது. ராமர் மதத்தலைவர் அல்ல. ராமர் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கான உருவகம். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர், சிறந்த கணவர், சிறந்த மகன் அதுமட்டுமில்லாமல் பல கடுமையான சூழலிலும் சத்தியத்தின் வழி நிற்பவர். அதனால் தான் இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் அவரை வழிபடுகிறார்கள்.

அது மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயரிலும் ராம் என்பது உள்ளது. ஈ.வே.ராமசாமிநாயக்கர், எம்..ஜி.ராமச்சந்திரன், பண்ருட்டி, ராமச்சந்திரன், பக்கத்து மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெய்டே மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் அதுமட்டுமல்லாமல் கடவுளை நம்பாத கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி அவர் பெயரில் சீதா ராம் இரண்டும் உள்ளது. மற்றும் ராமதாஸ் பஸ்வாண், ஜெகஜீவன் ராம் என அனைத்து இடத்திலும் ராம் உள்ளது. அதற்குக் காரணம் மதம் மட்டுமல்ல கலாச்சார மதிப்புகள் மற்றும் அவர் காட்டிய நல்ல பாதைகள். அது மட்டுமல்லாமல் இந்த அற்புதமான கோவில் அமைவதற்கு காரணமாக இருந்த பொதுமக்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கள்ஜி, விநாயக் கட்டியார், உமா பாரதி இவர்களெல்லாம் இதற்காக முன் நின்றவர்கள். அது மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த பராசரன்ஜி அயோத்தி கோவிலுக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிறப்பாக வாதாடி வெற்றி கண்டவர் என இவர்களை நினைவில் கொள்ள வேண்டும். அதோடு ராமரின் நற்குணங்கள் மற்றும் வழிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் இது பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு:

நான் அப்படி நினைக்கவில்லை தேர்தலுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் ராமர் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். அவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல.

ராமர் கோவில் திறக்கப்பட்டதையடுத்து ராம ராஜ்ஜியம் அமைய வழிவகுக்குமா என்ற கேள்விக்கு:

நிச்சயமாக ராம ராஜ்ஜியம் என்பது சிறந்த நிலை. அதனால்தான் ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என மகாத்மா காந்தி கூட சொன்னார்.

ராம ராஜ்ஜியத்தில் ஊழல் இல்லாத, சுரண்டல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத, சாதி மத மூலம் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதது என்று அர்த்தம். எனவே ராம ராஜ்யத்தை நோக்கி தான் செயல்பட வேண்டும். எனவே தற்போது உள்ள சூழலில் இந்தியா ஒரு வலிமையான நாடாக அமையும் என்று நம்புகிறேன் என முன்னாள் குடியிரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *