தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், இருளில் இருந்து ஞானம், பிரிவில் இருந்து ஒற்றுமை, ஏமாற்றத்தில் இருந்து நம்பிக்கை ஆகியவற்றை தீபாவளி திருநாள் நமக்கெல்லாம் நினைவுப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூம் உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளியை கொண்டாடும் விதமாக ஹட்ஸன் நதியின் இருகரைகளிலும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அதே போல், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸூம் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க்கில் புகழ்பெற்ற கட்டடங்கள் முதல் முறையாக மின்னொளியில் ஜொலித்தன.