பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக ஐரோப்பாவில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக தொடந்து குறைந்துவந்த கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள், தற்போது மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக கவலை தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் க்ளூக், “ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் இறப்புகள் ஏற்படலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 53 நாடுகளில் பரவும் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று வேகம் மிகவும் கவலைக்குரியது” என்று தெரிவித்தார்.