• Mon. Dec 9th, 2024

பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வர வலியுறுத்தல்

Byமதி

Nov 28, 2021

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தின. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர்.

மாநிலங்களவையில் 2010ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. இந்த ஆண்டாவது மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.