

சென்னையில் நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 709 மி.மீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்,1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கின்போது 1,101 மி.மீ. மழை பெய்தது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு 1,078 மி.மீ.யும் 2015ஆம் ஆண்டு 1,049 மி.மீ. மழையும், 2021 ஆம் ஆண்டு நவம்பரில் 11ஆம் தேதி மதியம் 1.30 மணி வரை 709 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த மாதம் முடிய இன்னும் 19 நாட்கள் உள்ளன. கடந்த 200 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே 1,000 மி.மீ. மழை அளவை சென்னை நுங்கம்பாக்கம் தாண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
