• Wed. Mar 26th, 2025

சென்னையில் மார்ச் 2ந் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு, மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் பேட்டி..,

Byகுமார்

Feb 4, 2024

சென்னையில் வருகிற மார்ச் 2 ம் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில ஸ்தாபன மாநாடு, வருகின்ற மார்ச் மாதம் 2-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையிலுள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நமது கட்சியின் தமிழ் மாநில குழு அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாட்டில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினை வழி நடத்துவதற்காக புதிய மாநில தலைவர் மற்றும் மாநில செயற்குழு , நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காக இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவது குறித்து மாநாட்டில் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியில் இடம் பிடித்து உள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ள அனைத்து இடதுசாரி ஜனநாயக கட்சிகளையும் அழைப்பது முடிவு எடுத்து உள்ளோம். இந்த மாநாட்டில் சுமார் 500 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள பெத்தாட்சி ஆசாத், முல்லை முருகன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஹனிபா விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.