• Fri. May 10th, 2024

அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு சிறந்த ஆன்மீகவாதி – அகில பாரத அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதர் பேட்டி…

ByKalamegam Viswanathan

Feb 4, 2024

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் அனுமன் சேனா கட்சி புதிய அலுவலகம் திறப்பிற்கு அகில பாரத அனுமன் சேனா தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர் மற்றும் அனுமன் சேனா கட்சி தேசிய துணைத் தலைவர் ஓசூர் லோகேஷ் ஜி, துணை மாநில பொதுச் செயலாளர் திருச்செந்தூர் ரவி கிருஷ்ணன், மாநில நிர்வாகி ராஜபாளையம் சிவகுமார், மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அகில பாரத இந்திய அனுமன் சேனா தலைவர் எஸ்.வி.ஶ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்..,

நாங்கள் அரசியல் அமைப்பு அல்ல,சமுதாயத்திற்கான அமைப்பு. மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்று நாங்கள் சொல்பவர்கள் அல்ல தவறு யார் செய்தாலும் நாங்கள் சுட்டிக் காட்ட தயங்க மாட்டோம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பழனியில் நடைபெற்ற சம்பவத்தை கடுமையாக கண்டித்தோம் அதற்காக போராடினோம் . கடந்த முறை எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது கொரோனாவை காரணம் காட்டி அனைத்து குழுக்களையும் கோயில்களையும் பூட்டினார். அதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். இந்து அறநிலைத்துறை தலைமையில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்,

இது போன்ற கோயில்களில் இனி அரசசே நினைத்தாலும் கட்ட முடியாது, இந்த கோவில்கள் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற மாபெரும் பொக்கிஷம் சொத்து என்று தான் சொல்ல வேண்டும் இந்த கோவில்களை விளையாட்டுத் தனமாக சென்று மறைந்திருந்தான் உண்டியலை உடைத்தார் என்று கூறுவது காரணம் அல்ல அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை எங்களை பொறுத்தவரை எல்லா ஆட்சியும் ஒன்றுதான். இந்துக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோகொண்டிருக்கிறோம். இனியும் போராடுவோம்.

அறநிலை துறை அமைச்சர் இவர் அவர் அல்ல என்பது அல்ல. சேவூர் ரொம்ப சந்திரனை காட்டிலும் தீவிர ஆன்மீகவாதி சேகர்பாபு கோவில்களுக்கும் செல்லக்கூடியவர் இனி தீவிரமாக கவனம் செலுத்தி திருப்பரங்குன்றத்தில் நடந்த அசம்பாவிதம் போல் எந்த கோயில்களிலும் நடைபெறாமல் ஜாக்கிரதையாக தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்தலைப் பொறுத்தவரை எங்களை பல்வேறு கட்சி கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். நாங்கள் ஆர் எஸ் எஸ் கொள்கையை சார்ந்து இருக்க காரணத்தினால் நாங்கள் பிஜேபி சார்பு இயக்கம் கிடையாது.
1996 இல் இதை திருப்பரங்குன்றத்தில் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அகில பாரத அனுமன் சேனா நாடு முழுவதும் ஒன்பது மாநிலங்களில் எங்கள் அமைப்புகள் உள்ளது எங்களுக்கென்று சில கோரிக்கைகள் உள்ளது கண்ணை மூடிக்கொண்டு யாரையும் ஆதரிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.

எங்களுக்கு உடன்பாடு இல்லை எங்களுக்கு தனிக் கொள்கைகள்,கோட்பாடுகள் உள்ளது.

டாஸ்மார்க் இருப்பதால் திமுகவை மட்டும் நாங்கள் குறை சொல்லவில்லை, ஏனென்றால் எல்லா கட்சியும் தான் சாராயம் விற்கிறார்கள். எல்லாக் கட்சிகளும் மக்களை மது குடிக்க வைக்க வேடிக்கை பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல டாஸ்மார்க் பார் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் உள்ளது பாஜக ஆளும் கோவா மகாராஷ்டிராவில் உள்ளது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பார்களையும் குளிக்க வேண்டும் 135 கோடி மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களிலும் மது ஒழிக்க வேண்டும்

நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, சர்வ கட்சியும் இணைந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும். திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் மட்டும் மது கடைகளை மூடாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்பதை சகோதரர் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அரசியலுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருந்த போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு முறையும் குறைகளை சுட்டிக் காட்டினோம்.

அனைத்துக் கட்சிக்கும் அண்ணா மற்றும் பெரியார் தான் தலைவர். எடப்பாடி தான் வேண்டும் ஸ்டாலின் வேண்டாம் என்ற கொள்கை வரவில்லை. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேசிய நிர்வாகம் யாருடன் கூட்டணி முடிவு செய்கிறதோ அவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.

இந்து அறநிலைத்துறை கோவில் நிலங்கள் நீக்கப்பட்டது திருப்திகரமாக உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு..,

கோயில் இடங்களை ஆக்கிரமிப்பதில் இந்தக் கட்சி அந்த கட்சி என்பது இல்லை எல்லா கட்சிகளும் இருக்கிறது, 40,000 ஏக்கர் கோவில் நிலங்களை இன்னும் மீட்டு வரவில்லை என்ற முன்னாள் காவல் அதிகாரி பொன்மாணிக்கவேல் கூறியிருக்கிறார். அதிமுக திமுக பிஜேபி போன்ற எந்த கட்சி யா இருந்தாலும் கோவில் நிலத்தை கோவிலுக்கு மரியாதையாக ஒப்படைக்க வேண்டும்.

நேற்று கூட உயர் நீதிமன்ற விசாரணையில் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் பல கோடி ரூபாய் வாடகைக்கு செல்ல வேண்டிய இடத்தை வெறும் 3000,1000 ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார்கள். அதைக் கூட வசூலிக்க யோக்கியம் இல்லை என்பதை கூறுவதில் வருத்தப்படுகிறேன்.

கோவில் இடத்தை கைப்பற்றி மீண்டும் கோவில் இடத்தில் ஒப்படைக்க வேண்டும். கோவில்களில் தங்கம் இருப்பு வைப்பதில் முறைகேடாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு..,

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது வடபழனி முருகன் கோவில் பின்னால் இருந்த 122 கிரவுண்ட் இடத்தை முன்னால் அதிமுக வில் இருந்து தற்போது பிஜேபியில் உள்ள கு.க.செல்வம் தலைமையில் அந்த இடம் சூறையாடப்பட்டது.

நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் எங்களை வந்து எம்.ஜி.ஆர் சந்தித்தார். கோவில் சொத்தை யாருக்கும் குத்தகைக்கு விடக்கூடாது மற்றும் கோவில் குளத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று எம்ஜிஆர் உத்தரவு பிறப்பித்தார், அதை அண்ணா திமுக,திமுகவும் கடைபிடிக்கவில்லை.

சென்னை அசோக் பில்லர் 100 அடி சாலையில் உள்ள கோவில் ஒன்றில் உள்ள குளத்தில் நீர் ஆதாரமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அந்த கோவில் குளம் சூறையாடப்பட்டது. தங்க நகைகளின் முறைகேடு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் உன் செட்டி என்று திமுகவை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சாட்ட வில்லை அனைத்து கட்சிகளுமே தவறு செய்கிறார்கள், கோவில் விஷயங்களில் சிண்டிகேட் போன்று செயல்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *