• Mon. Mar 24th, 2025

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது.

ByKalamegam Viswanathan

Feb 4, 2024

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் துபாயில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வயிற்றில் இருந்த 3 உருண்டைகளை இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். அந்த உருண்டைகளை சோதனை செய்ததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது .

அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 80 லட்சத்து 77 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 355 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது எனவே இதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.