• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கரும்புக்கான ஆதாய விலையாக ரூ.355 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Byவிஷா

May 1, 2025

2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.355ஃ- வீதம் 10.25சதவீதம் அடிப்படை மீட்பு விகிதத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது, இது 10.25சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை வழங்குகிறது.
இந்த விகிதத்திற்கு குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படுகிறது. இருப்பினும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், 9.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்புக்கான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும்.