

ஈரான் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதிக்க 12 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர்.
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 185 பேர் பலியாகி விட்டதாகவும், இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்தனர்.
இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நாடுகளின் தூதர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஈரான் இஸ்லாமிய குடியரசில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு நிலைமையை சரி செய்ய, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் அமர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். நவம்பர் 24ந் தேதி இந்த கூட்டம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
- தமிழகத்தில் முதன் முறையாக சினிமா ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கான ஒர் அறிய வாய்ப்பு..!நன்கு ஸ்டண்ட் பயிற்சி கலை தெரிந்த வெளி நபர்களுக்கு தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை … Read more
- படித்ததில் பிடித்ததுதத்துவங்கள் 1. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும். 2. முதலில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 … Read more
- குறள் 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும் விடாமல் வரும் வறுமை … Read more
- அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட … Read more
- சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018)…சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் … Read more
- பாரத ஸ்டேட் பாங்க்-ல் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து.., துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்..!மதுரையில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் … Read more
