• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஐரோப்பிய யூனியனில் விரைவில் இணைகிறது உக்ரைன்?

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேருவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அதன் தலைவர் ஐரோப்பிய யூனியன் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன் தெரிவித்துள்ளார்.ரஷியா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன், வெள்ளிக்கிழமை உக்ரைன் சென்று அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியை சந்தித்து உக்ரைன் நிலவரம் குறித்து பேசியுள்ளார்.மேலும், ரஷியப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்ட புச்சா பகுதியையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து பதிவிட்டுள்ள உர்சுலா வான் டெர் லியோன், ‘இந்த கொடுமைகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். உங்கள் போராட்டம் எங்களின் போராட்டமும்தான். ஐரோப்பா உங்கள் பக்கம் இருக்கிறது என்பதைச் சொல்லவே நான் இன்று கீவில் இருக்கிறேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதன்பின்னர் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேருவதற்கான ஆவணங்களை ஸெலென்ஸ்கியிடம் வழங்கியுள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உர்சுலா வான் டெர் லியோன், ‘உக்ரைன் ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. இன்று உக்ரைன், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆவதற்கு அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

உக்ரைன் எங்களுடன் உறுப்பினர் ஆவதற்கு எங்களால் முடிந்தவரை இந்த செயல்முறையை அனைத்து வகையிலும் முடுக்கிவிடுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.பொதுவான பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுடன் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன், தற்போது 27 ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.