• Fri. Apr 26th, 2024

உதயநிதி ஸ்டாலினுக்கு
அமைச்சரவையில் இடம்..?

அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021-ம் ஆண்டு
மே 7-ம் தேதி 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் கடந்த மார்ச் 29-ம் தேதி அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரனுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. இதனை வகித்து வந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதன் பின்னர் தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அமைச்சரவையில் இலாகா மாற்றத்தோடு, புதிய எம்.எல்.ஏக்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைக்கிறது. மேலும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை அமைச்சரவையில இடம்கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *