• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பேருந்து கட்டணம் உயர்கிறதா..?: அமைச்சர் விளக்கம்..!

ByA.Tamilselvan

Dec 7, 2022

தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார் .
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில் பேருந்து கட்டணம் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறதே, அது உண்மையா..?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் நஷ்டத்திலிருந்து துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.