உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிந்து திமுகவினர் கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து விழாவினை தி.மு.க நிர்வாகிகள் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
கம்பம் நகரில் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை பிரிவு மாவட்ட செயலாளர் வசந்தன் தலைமையில் ஒன்று கூடிய தி.மு.க நிர்வாகிகள் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று கம்பம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாள் விழாவினை கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டி, தெற்கு நகரச் செயலாளர் பால்பாண்டி ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.