• Thu. Apr 25th, 2024

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி- கிண்ணக்கொரை அணி வெற்றி

மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சின்னவர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணியினருக்கு திமுக நிர்வாகிகள் கோடையம் காசோலை வழங்கி சிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த. நாளை முன்னிட்டு சின்னவர் டிராபி மஞ்சூர் கிரிக்கெட் போட்டி மஞ்சூர் அருகே உள்ள கெச்சிகட்டி மைதானத்தில் நடைபெற்றது கடந்த மாதம் 25ஆம் தேதி துவங்கி தொடர்ந்து தமிழர் திருநாள் பொங்கல் வரை நடைபெற்ற போட்டியில் கிண்ணக்கொரை சேரனுர் போர்த்தியாடா காசோலை மஞ்சூர் பெரியார் நகர் பிக் கட்டி மேல்குந்தா குன்னூர் எமரால்ட் என. 16 மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றது. இதில் கிண்ணக்கொரை சேரனூர் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததூ இறுதிப்போட்டி கெச்சிகட்டி மைதானத்தில் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் கிண்ணக்கொரை அணி எட்டு விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்து சேரனும் அணி 9 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சேரனுர் அணி இரண்டாம் இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி கே ஸ் பாபு தலைமை தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பில்லன் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கீழ்குந்தா பேரூராட்சி திமுக செயலாளர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி துணைத் தலைவர் நேரு மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரன் மாடக்கண்ணு துணைச்செயலாளர் நாராயணன் சிவக்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகம் மாலினி சாரதா தீபா மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜசேகர் காந்திபுரம் சங்கரன் ராதாகிருஷ்ணன் குட்டி வாத்தியார் ராமநாதன் சாஜீ குமார் மனோஜ் முஸ்தபா பிரபு ரோஸ்லின் முள்ளிமலை கெச்சிகட்டி ஊர் பிரமுகர்கள் ஆரி சிவா ராமன் பிரித்திவிராஜ் சிங்காரன் நரேன் திமுக இளைஞரணி விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணி சின்னவர் டிராபிக்க்கான சுழற் கோப்பை ரொக்க பரிசை ஐந்தாயிரம் இரண்டாம் இடம் பிடித்த. சேரனூர் அணிக்கு சுழற் கோப்பை பரிசு தெகை 3 ஆயிரம் வழங்கப்பட்டது
இதில் பங்குபெற்ற அனைத்து அணி வீரர்களிள் தலா ஒருவருக்கு ஆட்ட நாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *