நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி, 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் இரண்டு நாட்கள் (நவ.12 மற்றும் 12-ம் தேதி) நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் இந்தத் தேர்வுகள் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.