முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாம். 2024 தேர்தலில் பாஜக அழகிரியை தன்பக்கம் இழுத்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரின் மருமகன் சபரீசன் செய்த முயற்சியால் இது சாத்தியமாகியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.மேலும் ஸ்டாலின்,மு.க.அழகிரியின் இணைவை திமுக தொண்டர்களும் எதிர்பார்போடு காத்திருப்பதாக தகவல் .