• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி மாணவர் பரிதாப பலி…..

ByKalamegam Viswanathan

May 10, 2023

சிவகாசியில் சோக சம்பவம்… சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி மாணவர் பரிதாப பலியானார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் சிவகாசி அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக, கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை ஆகாஷ், சிவகாசி – திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நின்ற மாடு மீது, ஆகாஷ் ஓட்டி வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.