• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில்.. இரண்டு ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை..!

சிவகங்கையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.

போஸ்கோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிவகங்கை அடுத்த காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது கடந்த 11-8-2015 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் பள்ளியில் 2ம் வகுப்பில் படித்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் ரெங்கராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர.; வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ரங்கராஜனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ 10,ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடாக ரூ 6 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.


இதேபோல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த சரவணன் 48 என்பவர் கடந்த 14-12-2017 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் ஏழாவதுவகுப்பு படித்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்தது தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர.; அவர் மீது சிவகங்கையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ 2 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.