• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கல்லூரியில் போதை பொருள் நுகர்வு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

ByT. Balasubramaniyam

Feb 28, 2026

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட கிளையின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்
ஆ.சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். சந்திர சேகர் தலைமை தாங்கினார்.

ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். பெ.ஜெயச்சந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் இ.எழில் தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் மருத்துவர் கு.க.சங்கரி, மருத்துவ அலுவலர் பிரியதர்சினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு,போதைப் பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். அரியலூர் காருணா லயாவின் சுபம் போதை மீட்பு மறுவாழ்வு மையம், துறை சார்ந்த அலுவலர் க.ஆனந்தராஜ் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கினார்.

பின்னர் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட பொறுப் பாளர்கள், நிர்வாக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஜெயங் கொண்டம்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.க.ஜெய்கணேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.