• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளங்கோவன்…

Byமதி

Oct 22, 2021

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இளங்கோவன் சேலத்தில் மாளிகை போன்ற பிரமாண்ட வீடுகட்டி வருகிறார். அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது இங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததை கண்டுபிடித்தனர். புதிதாக கட்டப்படும் வீட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இளங்கோவன் வசமாக சிக்கிக் கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எடிப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் ஆர். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.