

மதுரை வளையங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1200 கிலோ ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது..
மதுரை வளையங்குளம் பகுதியில் இன்று மதுரை சரக டி.எஸ்.பி., ஜெகதீசன் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனை செய்து மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ வாகனத்தை சோதனை செய்த போது 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் மதுரையை சேர்ந்த வினோத் , மலை மன்னன் ஆகிய இரண்டு பேர் கடத்தி வந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

