• Wed. Dec 11th, 2024

காளையார் கோயில் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரிய நரிகோட்டை என்னும் இடத்தில் சிவகங்கையை நோக்கி தென்னை மட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையோர மரத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் மணிகண்டன், அழகுமணி இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பவ காவல்துறையினர் இருவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்து செல்வம், அலெக்ஸ் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.