• Sat. Apr 20th, 2024

குயிலியின் 241 வது நினைவு தினம்- வீரவணக்க நாளாக அனுஸ்டிப்பு..

சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் நினைவிடத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத்தூணுக்கு அவரது 241 வது நினைவு நாளை முன்னிட்டு சமுதாய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். வெள்ளையர்களின் போர் தந்திரங்களை முறியடிக்க 1780ல் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று, சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் குயிலி தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்து தன் உயிரை துறந்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரிடம் இருந்து வேலுநாச்சியாரால் சிவகங்கை சீமை மீட்க்கப்ட்டது.

குயிலியின் வீரத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் விஜயதசமி அண்டு அவரது நினைவு நாள் வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவு தூணுக்கு அரசியல் தலைவர்களும், சமுதாய மக்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது குயிலிக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டும், அரசு விழாவாக அறிவிக்க கோரி என அரசிற்கு கோரிக்கை வைத்தனர். குயிலியின் தியாகத்தை போற்றும் விதமாக குயிலியின் உருவம் பொறித்த தபால்தலையை இந்திய அஞ்சல் துறையினர் இரு தினம் முன்பு வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *