• Tue. Feb 18th, 2025

டிரைலர் லாரி மோதியதில்இருவர் பலி.

கனிமம் எடுத்து சென்ற டிரைலர் லாரி மோதியதில் இருவர் பலி. கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான புலியூர் குறிச்சி சந்திப்பில் இன்று மதியம் (ஜனவரி_23.01.2025, மதியம் 12.10) மணி அளவில், கேரள மாநிலத்திற்கு கனிமத்தை எடுத்துச் சென்ற டிரைலர் லாரி வேகமாக வந்த நிலையில், புலியூர் சந்திப்பில் பொலீரோ ஜீப் கார் மீது, 18_டயர்களில் ஓடும் டிரைலர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி.

விபத்து பற்றி கேள்விபட்டதும் தக்கலை காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் மரணம் அடைந்த இருவரது உடலை கைபற்றி நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.

கனிமம் எடுத்து செல்லும் டிரைலர் லாரிகள் ஏற்படுத்தும் விபத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குமரியில் உயர்ந்து வருவது போல், பல அப்பாவி மக்களும் மரணம் அடைவது ஒரு தொடர் கதையாக தொடர்கிறது.