இந்தியாவின் தென் கோடியில் அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
குமரி மாவட்டத்தில் காலம் காலமாக பாரம்பரிய மருத்துவ முறை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது. குமரிக்கே உரிய பழமொழி தடுக்கி விழுந்தால், வீழ்ந்து கிடக்கும் இடம் ஏதாவது ஒரு மருத்துவ மனையின் வாசலாகத்தான் இருக்குமாம்..!?

குமரி மாவட்டம் பாரம் பரியா மருத்துவர்கள் நிறைந்த பகுதி என்பதால். சந்ததிகளாக அனுபவ சித்தமருத்துவர் களையும். சித்த மருத்துவ வைத்தியர்கள் என்ற அங்கீகார சான்றிதழை அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை குமரி மாவட்டம் மட்டுமே அல்லாது தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரிய வைத்தியர்களின் கோரிக்கையாக உள்ளது (பல வட மாநிலங்களில் அரசின் அதிகார பூர்வ சான்று பெற்று சித்த மருத்துவத்தை செய்து வருவதாக) தெரிவித்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் (ஜனவரி 23,24,25) தேதிகளில் நடைபெறுகிறது. அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தின், மாபெரும் பாரம்பரிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாட்டை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு இன்று கன்னியாகுமரியில் அகில இந்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், இங்குள்ள மூலிகை கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன். மாநாட்டு குழு தலைவர், மற்றும் சித்த மருத்துவ அகில இந்திய கழகத்தின் தலைவர் குமரேசன் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள சித்த மருத்துவர்களும் பங்கேற்றார்கள்.

மாநாட்டின் நிறைவு தினத்தன்று சித்த மருத்துவ மாநாட்டில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.குமரியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்(காங்கிரஸ்)
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மகனே தங்கராஜ் (திமுக) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் (அதிமுக) நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி (பாஜக) ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், கழகத்தின் பொருளாளரும் ஆன மருத்துவர் வினோத் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

