மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த ஜெயராமன் (53) என்பவர், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் 25 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியை தூக்கிக் கொண்டு செல்லும் போது, மதுரையில் இருந்து மேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியைச் சேர்ந்த ஜோதிமுத்து (24) எதிர்பாராத விதமாக மோதியதில், இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஜெயராமன் சாலையிலேயே விழுந்து கிடந்ததை யாரும் கவனிக்காததால் நான்கு வழிச்சாலையில் சென்ற கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் அவர் மீது ஏறி சென்றது உடல் நசுங்கி கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மேலூர் காவல்துறையினர், இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
