சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள். இ
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இதில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 6 பேர்உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.