பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை கட்டுமானத் தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
அந்த இடிபாட்டில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி ஏஎஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.