• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இரு பெரும் விழாக்கள்

Byகுமார்

Apr 20, 2024

மதுரையில் பீஸ் பவுண்டேஷன் சார்பில் புதிய திட்டத்தின் துவக்க விழா ஆலோசனை மற்றும் ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் இரு பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.

மதுரையில் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில் பீஸ் பவுண்டேஷன் சார்பில் புதிய திட்டத்தின் துவக்க விழா ஆலோசனை மற்றும் ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் இரு பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பீஸ்பவுண்டேஷன் நிறுவனர் முகமதுபாரூக் தலைமையிலும் சிறப்பு விருந்தினராக டவுன் காஜி சபூர்மைதீன் கலந்து கொண்டு உலாமாக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கு 2000பேர்க்கு ரமலான் அரிசி மளிகை பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பீஸ் பவுண்டேஷன் நிறுவனர் முகமதுபாரூக் செய்தியாளர்களிடம் கூறியது..,

ரமலான் மாதத்தில் தேர்தல் விதிமுறை அம்மணியில் இருந்ததால் இப்பொழுது வழங்க முடியாத நிலையில் இன்று ரமலான் மாத பொருட்கள் வழங்கும் விழா அதே போன்று தீபாவளி, கிறிஸ்துமஸ் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பட வேண்டி நமது நிறுவனத்தின் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு நிதி உதவி செய்து கொண்டிருக்கிறோம். தற்போது இந்த உதவிங்கிறது ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில ஒரு முன்னேற்ற மாற்றம் வரக்கூடிய நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வில் பரிசு பொருட்களை பெற்றுக் கொண்ட உலமாக்கள் பொதுமக்கள் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சென்றனர்.