
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி கடைவீதியில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்த பெயிண்டிங் தொழிலாளி ஆனந்தமூர்த்தி (33) மற்றும் வரகூர் பகுதியைச் சேர்ந்த அரிவாள் செய்யும் தொழிலாளி பாபு (28) இவர்கள் இருவரும் வீட்டு உபயோகத்திற்கோ, விவசாயத்திற்கோ அல்லாமல் மனித உயிர்களை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பெரிய வீச்சு அரிவாள்களை கையில் வைத்துக் கொண்டு நாங்க தான்டா இந்த ஏரியாவில் பெரிய ரவுடி என்கிட்ட யாராவது மோதினால் அவன் தலை துண்டா கீழே விழும் என்று கத்திக்கொண்டு சாலையில் செல்வோர்களை மிரட்டி கொண்டு இருந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதனையடுத்து இரண்டு பேர் மீது வழக்குப் பதிந்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
