• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எம்எல்ஏ விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

ByP.Thangapandi

Oct 9, 2026

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.,

தவெக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் பெற்ற
இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏவுமான விஜய், தலைமையிலான நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.,

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க, தமிழக வெற்றிக் கழகம் வாழ்க என கோசங்களையும் எழுப்பி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.,