மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டை மயானம் பகுதி அருகில் நெல்கொள்முதல் அமைக்கும் களம் ஒன்று உள்ளது இதன் அருகில் பானு என்பவர் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.

அருகிலேயே கடையுடன் சேர்ந்த வீடும் இருப்பதால் கடை நேரம் முடிந்தவுடன் வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இட்லி கடை மற்றும் வீடு ஆகியவற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த பானு உயிர் பயத்தில் சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீடு மற்றும் கடையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
மேலும் வீட்டில் குடியிருந்த பானு என்பவரையும் பத்திரமாகமீட்டனர் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.




