குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைமை அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் பா.சிவக்குமார், பொதுச்செயலாளர் கெ. கதிர்வேல், துணைத்தலைவர்கள் சா.பெஞ்சமின், மீடியாராமு, ஜெ.பி.நாகபூஷணம், இணைச்செயலாளர் ரங்கபாஷ்யம், துணைச் செயலாளர் ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நிலாவேந்தன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிவசுந்தர், து. மனோகரன், கண்ணன், ஜீவா, குமார், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முப்படைகள் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.