• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ரவுண்டானா பகுதியில்அண்ணாவின் சிலை முன்பு நினைவு அஞ்சலி..,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் கன்னியாகுமரி நகர திமுக சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. ரவுண்டானா அருகே அமைந்துள்ள அண்ணா முழு உருவச்சிலைக்கு நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் .பூலோகராஜா, ஆட்லின், இக்பால், ராயப்பன், முன்னாள் கவுன்சிலர் மெல்வின், மாவட்ட நிர்வாகிகள் அரிகிருஷ்ணபெருமாள், .அன்பழகன், ஹெச்.நிசார், புஷ்பராஜ், பேரூர் நிர்வாகிகள் சகாய ஆன்றனி, ரூபின், சின்னமுட்டம் ஷ்யாம், ரஞ்சித்குமார், நாஞ்சில் மைக்கேல், வழக்கறிஞர் ஷேக், ஆன்சலாம், சார்லஸ், செந்தில் மற்றும் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், பீட்டர், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணாவின் உருவபட்டத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,திரைப்பட
தயாரிப்பாளரும், தென்குமரி கல்விக்கழக செயலாளர் பி.டி.செல்வகுமார் கூறியதாவது,
நவீன தமிழகத்தை உருவாக்க முயற்சி செய்தவர் பேரறிஞர் அண்ணா. இன்றைக்கு அவரது கனவை நனவாக்கும் வகையில் மக்கள் வளர்ச்சி ஒன்றையே லட்சியமாக கொண்டு திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் வழி நடப்போம் என தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை பகுதி வரையிலான. முக்கிய சாலை சந்திப்புகளில். அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திரு உருவம் படத்திற்கு. தி.மு.க.,அ.தி.மு.க.,வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.