விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி தெற்கு ஆணைகூட்டம், மேல ஒட்டம்பட்டி,விஸ்வநத்தம், சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சாத்தூரில் இருந்து வெற்றிலை யூரணி வழியாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் பகுதியில் மெயின் ரோட்டில் இருந்த எட்டு மரங்கள் வேருடன் சாய்ந்தது.

இதனால் சிவகாசியிலிருந்து வெற்றிலையூரணி வழியாக சாத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. வெற்றிலையூரணி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள மரம் கிராம நிர்வாக அலுவலகம் கட்டடம் மீது சாய்ந்தது. மழைக்கு ஒதுங்கியவர்கள் அலறி அடித்து ஓடினர்.
தெற்கு ஆணை கூட்டம் ,கீழ தாயில்பட்டி, வெற்றிலை யூரணி பகுதியில் நான்கு மின்கம்பங்கள் சாய்ந்தன.இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் கிராமத்தில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.