• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஈஷாவில் யக் ஷா எனும் இசை மற்றும் நடனத் திருவிழா..,

BySeenu

Feb 15, 2026

இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹாஅன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது.

இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 10 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 13 அயல் மொழிகள் என மொத்தம் 23 மொழிகளில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களைப் போற்றும் விதமாக, மஹாசிவராத்திரிக்கு முன்னதாக மூன்று நாட்கள் ஈஷாவில் யக் ஷா எனும் இசை மற்றும் நடனத் திருவிழா நடைபெற்றது.

அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் யக் ஷா 2026 பிப்.12 முதல் 14 வரை தினசரி மாலை 7 மணிக்கு நடைபெற்றது. பிப்ரவரி 12 அன்று புர்பாயன் சாட்டர்ஜியின் சிதார் இசை நிகழ்ச்சியும், 13 அன்று பாரத் சுந்தரின் கர்நாடக சங்கீதமும், 14 அன்று வைபவ் அரேகரின் பரதநாட்டியமும் நடைபெற்றன.

மேலும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்டினாவிஸ், மத்திய அமைச்சர் எல் முருகன் , புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்