• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் பூமி பூஜை போட்டு, பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணிகளை, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அருள் புதூர், கிறிஸ்துராஜபுரம், மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, ஜமீன் நல்ல மங்கலம், மேல வரகுணராமபுரம், புத்தூர், இனாம்கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போட்டு, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.