• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட்டம்..,

Byமுகமதி

Feb 15, 2026

சிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாக்கள் நடைபெறும் இன்று பகலில் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கொண்டாட்டம்.

இன்று சிவராத்திரி என்பதால் புகழ் பெற்ற சிவன் கோவில்கள் தொடங்கி சாதாரண கோவில்கள் வரை அந்தந்த கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் பிரபலமடைந்திருப்பதற்கு ஏற்பவும் இன்று இரவு சிவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில் மட்டுமல்லாது பல்வேறு கோவில்களிலும் இன்று பகலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், பால்குடம், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் என்று கோவில்களுக்கு செய்து இந்த சிறப்பு நாளை கொண்டாடினார்கள். திருவரங்குளம் அருகே உள்ள ஏழு முக காளியம்மனுக்கு இன்று திருவரங்குளம் சிவன் கோவில் அருகில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் ஊர்வலமாக வந்தனர். அதேபோல் தோப்புக்கொல்லை அருகில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ஏழு முக காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட சிவன் கோவில்களில் இரவு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.