மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டாவது வார்டுக்குட்பட்ட கூடல் நகர் பகுதியில் பாண்டியன் நகர், திருமால் நகர் அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து இருப்பதாலும் மக்களுக்கு வசதியாக குழந்தைகள் வயதானவர்களை மழை நீரிலிருந்து போக்குவரத்துக்கு பரிசல் ஒன்றை தயார் செய்து மக்களை ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒரு நாள் மழைக்கு இவ்வளவு தண்ணீர் வருகிறது. இன்னும் பருவமழை தொடங்கி விட்டால் நாங்கள் எப்படி வெளியே செல்வது எனவும், உடனடியாக மழை நீர் வெளியே செல்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்களா அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
