மின் கட்டண உயர்வை நானே கட்ட முடியவில்லை சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சைகட்டிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரை வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமையில் அதிமுகவினர் வாழை மர தோரணம் கட்டி வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு ஆய்வு கூட்டம் விராலிபட்டி குட்லாடம் பட்டி, கச்சைகட்டி, பூச்சம்பட்டி கட்டக்குளம் சி. புதூர் சித்தாலங்குடி திருவாலவாயநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. கச்சை கட்டிகள் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரை வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமையில் அதிமுகவினர் வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசுகள் வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இங்கு பேசிய ஆர். பி. உதயகுமார் கடந்த மூன்று ஆண்டுகளில் வருடா வருடம் மின்சார கட்டணம் உயர்ந்து பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக மின்சார கட்டணம் மூன்று மடங்கு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் மின்சார கட்டணம் கட்டும்போது எனது உதவியாளர் முப்பதாயிரம் வேண்டும், 40 ஆயிரம் வேண்டும் என கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது சட்டமன்ற உறுப்பினராக உள்ள எனக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் வரும் நிலையில் முப்பது ஆயிரம் மின்சார கட்டணம் கட்டுவது மிக சிரமமாக உள்ளது. எனக்கே இப்படி என்றால் சாதாரண பொது மக்களின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கடந்த முறை 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அப்போது மின்சார கட்டணத்தை உயர்த்த வில்லை. தற்போது உள்ள திமுகஅரசு வருடம் தோறும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது இந்த நிலை மாற மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வரவேண்டும். அதற்கு ஒவ்வொரு நிர்வாகியும், தலா 100 ஓட்டுகள் வீதம் வாக்காளர்களை வாக்கு சாவடிக்கை கொண்டு சேர்க்கும் பணியினை இன்று முதல் தொடங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம். வி. கருப்பையா மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, துரை தன்ராஜ், மகளிர் அணி லட்சுமி, நிர்வாகிகள் கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, விவசாய அணி வாவிடமருதூர் குமார், முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், விசு, பெரிய கருப்பன், ஹரி, தக்காளி முருகன், தர்மர், ஜேசிபி பிரபு, நாகராஜ், சுந்தர்ராஜ், வீரு, பிச்சைமூர்த்தி, சந்திர போஸ், சுரேஷ், அழகுமலை கண்ணன், பாலாஜி பாண்டி, கார்த்தி, பெரியசாமி, ஜேசிபி மணி, அழகர் மணிகண்டன், செந்தாமரைக் கண்ணன், கிருஷ்ணசாமி, முத்துச்சாமி, வி. எஸ். பாண்டியன், பிரசன்னா, ரவி ராஜா பரந்தாமன், ஜெயக்குமார், மலைச்சாமி, வேலுச்சாமி, சசி, துரைப்பாண்டி, மாலிக்முத்து முனியாண்டி, பிரேம், தென்கரை நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டைமேடு பாலா நன்றி கூறினார்.