• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஈரோட்டில் திருநங்கைகளின் பேஷன் ஷோ

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மணமகள் அலங்காரத்தில் திருநங்கைகளின் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மணமகள் அலங்காரம் செய்வதற்கு 2 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் திருநங்கைகள் மணப்பெண் அலங்காரம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகளின் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திரைப்பட இயக்குநர் அசாருதீன், நடிகர்கள் கௌதம், ரபி உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெய்சாரதி தெரிவித்தார்.