• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புஞ்சை புளியம்பட்டி அருகே தற்கொலைக்கு முயன்றவர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே காவல் நிலையம் முன்பு தகராறு செய்து தற்கொலைக்கு முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (37) கடந்த வெள்ளிக்கிழமை புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஓம் சக்தி கோவில் அருகில் நடைபெற்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட தனசேகர் உள்ளிட்ட 9 நபர்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையம் முன்பு வந்த தனசேகர் சூதாட்டம் ஆடிய போது தன்னை பிடித்த போலீஸ் என்மீதே வழக்கு பதிவு செய்து விட்டீர்களாடா,உங்களை என்ன செய்கிறேன் பார் என தகாத வார்த்தையில் திட்டிவிட்டு தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தபோது,
காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும், பொதுமக்களும் தடுத்து தனசேகர் மீது தண்ணீர் ஊற்றினார்கள் .
இந்நிலையில் காவல் நிலையத்தில் தகராறு செய்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தனசேகர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். தனசேகர் பழங்குற்றவாளி என்பதும் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், புளியம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது