தாம்பரம் பெருங்களத்தூரில் கொட்டும் மழையிலும், வாகன ஓட்டிகளுக்கு எமதர்மன் வேடம் அணிந்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நடைபெற்றது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை எமதர்மன் கயிறு போட்டு இழுத்து உயிரைப் பறிப்பது போல தத்துவமாக இளைஞர்கள் செய்து காட்டினர்.
தாம்பரம் மாநகர ஆணையரகம் சார்பில், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து சாலைகளில் ஹெல்மெட் இல்லாமல் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக எமதர்மன் சாலையில் காத்திருந்து ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை கயிறு போட்டு இழுத்து பரலோகத்திற்கு அழைத்து செல்வது போல தத்ரூபாக நாடகம் நடத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் எமதர்மன் சாலையில் நடனம் ஆடி வாகன ஓட்டிகளுக்கு கொட்டும் மழையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் சாலைகளில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பதை போக்குவரத்து போலீசார் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.