• Wed. Feb 11th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தேவஸ்தானம் வாடகைக் கடைகள் அடைத்து வியாபாரிகள் போராட்டம்..,

Byadmin

Feb 11, 2026

சர்வதேச சுற்றுலா பகுதியில் உள்ள தேவி பகவதியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்கள்,தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கு மாத வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள கடைகளின் எண்ணிக்கை 300_க்கும் அதிகமான கடைகள். சன்னதித்தெரு, கடற்கரை பகுதியில்,இரதவீதிகளில் உள்ளது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வாடகை 15. சதவீதம் உயர்த்தப்படும். தெற்கு தெரு உட்பட்ட பகுதிகளில். ஒப்பந்த காரர்கள் வாடகை செலுத்தி வரும் நிலையில்.

தேரோடும் வீதியில் உள்ள கன்னியம்பலம்(கல்லால் ஆன மண்டபம்.
இதனுள் ஒரு பிள்ளையார் கோயில் ஒன்று சிறிய அளவில் உள்ளது.)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் திருவிழா காலங்களில், வீதியுலா வரும் அம்மனின் வாகனம். இந்த கன்னியம்பலத்தில், வருடத்தில் இரண்டு முறை நடைபெறும் காலங்களில். அம்மனின் வாகனம் வருடத்தில் இரண்டு முறை 10_ நாட்கள் என இரண்டு முறை வைப்பது வாடிக்கை.

கன்னியப்பலத்தின் வலது சுவர் பகுதி,தலைவாதலின் பக்கவாட்டில் இரண்டு கடைகள்,பின் பக்கம் என மொத்தம் 12_ கடைகள் பல ஆண்டுகள் கடை நடத்தப்பட்டு வரும் நிலையில்.

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சில அமைப்புகள். அம்மனை இறங்கி வைக்கும் மண்டபத்தின் பின் வாசலை தினம் திறந்து வைக்க வேண்டும் என்ற ஒரு பொது நல வழக்கு போடப்பட்ட நிலையில். இரண்டு மாதங்களுக்கு முன் நீதி மன்றம் கன்னியம்பலத்தின் முன் வாதலுடன்,பின் வாதலையும் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு அந்த பகுதியில் இருந்த கடை அகற்றப்பட்டு பின் பகுதி வாசலும் திறக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பொது நல வழக்கு இட்ட அமைப்பினர் நீதிமன்றத்தில் கன்னியம்பலம் பகுதியில் உள்ள அனைத்து (12) கடைகளையும் முழுவதுமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில். மதுரை நீதிமன்றம் கடந்த (பெப்ரவரி 10)ம் நாள்
வழங்கிய தீர்ப்பு. இன்றிலிருந்து 24_ மணிநேரத்தில் 12_ கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த. குமரி மாவட்ட அறநிலையத்துறை
இணை ஆணையர் ஜான்சி ராணி, கன்னியாகுமரி கோவில் மேலாளர் ஆனந்த். சம்மந்தப்பட்ட 12_ கடைகளை அகற்ற வந்த நிலையில். கன்னியாகுமரியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகளின் கண்டனம் தெரிவித்து கன்னியம்பலம் பகுதியில் பெரும் திரளாக கூடி குறிப்பிட்ட 12_ கடைகளையும் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோசமிட்டு வந்த சூழலிலே.அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு கடையை பூட்டி சீல் வைத்தது. அனைத்து வியாபாரிகள் அவர்களது கண்டனத்தை தெரிந்து கோசம் எழுப்பினார்கள்.
இந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதியம் 2_ மணிவரை எவ்விதமான முடிவுக்கும் வர முடியாத நிலையில் உயர் அதிகாரிகளிடம் வியாபாரிகளது எதிர்ப்பு நிலையை அதிகாரி ஜான்சி ராணி தெரிவித்து வருகின்றார்.