• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் வியாபாரிகள் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

ByN.Ravi

Jul 13, 2024

மதுரை, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கம் உணவுத்துறை, சுகாதாரத்
துறை, பேரூராட்சி ஆகியோர் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, சோழவந்தான் வர்த்தகர் நலச்
சங்கத் தலைவர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர்கள்
எம். கே. முருகேசன், கல்யாணசுந்தரம், சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செயலாளர் ஆதிபெருமாள் வரவேற்றார். உணவுத்துறை அலுவலர்கள் ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகியோர், அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்
கூடாது, உணவுத்துறை சம்பந்தமாக லைசன்ஸ் எடுக்காதவர்கள் எடுக்க வேண்டும், லைசென்ஸ் எடுத்து காலாவதியானவர்கள் புதுப்பிக்க வேண்டும் என்று பேசினார்கள். சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்: கோவில், பள்ளிக்
கூடம் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பலகை வைக்க வேண்டும்,
அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்யக்கூடாது.
பேரூராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் சூரியகுமார் பேசுகையில்: பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி ஆகியவை குறித்த காலத்தில் கட்டினால் 5% போனஸ் வழங்கப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதையும் மற்றும் பயன்
படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், முத்தையா, ரவி, மணிகண்டன், உட்பட வியாபாரிகள் ஆகியோர் தங்களின் சந்தேகங்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். சங்கப் பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.
இதில், சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணி, ஹரிச்சந்திரன், முத்துகுமரன் நகை மாளிகை உரிமையாளர் ராஜா என்ற இருளப்பன், சரவணன், ராஜா உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.