சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே செய்தியாளர்களை சந்தித்த ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவமாக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என பேட்டியளித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக காளையார்கோவில் அருகே புலியடிதம்பம் கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், நிறுத்திவைக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த பெரும் முயற்சி எடுத்த முதல்வர் ஸ்டாலின். தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து உளருகிறார்.
எந்த ஒரு இடத்திலும் சிறிதளவு கூட பிரச்சனை ஏற்படாத நிலையில் ஏஜெண்டுகள் மிரட்டப்படுவதாக கூறுவது உண்மைக்கு புரம்பானது. அவ்வாறு இருந்தால் முறையாக புகார் தெரிவிக்காமல் இப்படி செய்தியாளர்களை சந்திப்பதும், அதில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் மழுப்புவதும் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவமாக ஜெயக்குமார் உள்ளார் என்று தெரிவித்ததுடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை போல் இந்த தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றிபெருவோம் என்று தெரிவித்தார். அனைத்து கட்சிகளுமே தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் என கூறுவது இயல்பு. அதை கூறியதற்கு அதற்கு ஒரு அர்த்தம் கற்பிப்பது என்பது தவறு என்றும் அவருடைய பேச்சில் முழுமையாக தேர்தல் தோல்வி பயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.