• Fri. Mar 29th, 2024

விபத்தில் சிக்கியவர் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிர்தப்பிய அதிசயம்..!

Byவிஷா

Oct 1, 2021

சிங்கப்பூரில் நடந்த சாலை விபத்தில் அடிபட்ட நபர் ஒருவரது ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஆப்பிள் வாட்சின் புதிய மாடல்கள் பல நவீன வசதிகளோடு வரத்தொடங்கி உள்ளன. முக்கியமாக தனிப்பட்ட நபர்களின் உடல்நிலை, அவர்களின் பாதுகாப்பு இவரை கருத்தில் கொண்டு நிறைய வசதிகள் ஆப்பிள் வாட்ச்களில் கொண்டு வரப்பட்டு உள்ளன. முக்கியமான ஆப்பிள் சீரிஸ் 4 வகை வாட்ச்களில் நமது இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை மட்டுமின்றி நமக்கு விபத்து ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வசதிகளும் உள்ளன. அதாவது ஆப்பிள் வாட்ச் கட்டிய ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அதை அந்த வாட்ச் கண்டுபிடிக்கும் திறன் கொண்டு உள்ளது.


வேகமாக விழுவது, தரையில் வேகமாக மோதுவது, ஆப்பிள் வாட்ச் கட்டியவரின் திடீர் அடைவு, அவரின் இதய துடிப்பு இதை வைத்து ஆப்பிள் வாட்ச் விபத்தை கணிக்கும். சமயங்களில் நீங்கள் லேசாக தவறி விழுந்தால் கூட ஆப்பிள் வாட்ச் அதை விபத்து என கருதும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில் வாட்ச் திரையில் நீங்கள் விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.


ஒருவேளை உங்களுக்கு உண்மையில் விபத்து ஏற்பட்டால், உங்களால் வாட்ச் திரையில் பதில் அளிக்க முடியாது. உங்களிடம் இருந்து பதில் வராத சமயத்தில், உங்களுக்கு விபத்து ஏற்பட்டதை உறுதி செய்து கொண்டு ஆப்பிள் வாட்ச் அவசர நடவடிக்கைகளை எடுக்கும். அதாவது நீங்கள் அவசர அழைப்பிற்காக சேவ் செய்து இருக்கும் எண்ணுக்கு போன் செய்யும், அதோடு உங்களது லொகேஷனை அனுப்பும்.


அதேபோல் அந்த நாட்டின் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவிக்கும். உங்கள் இதய துடிப்பு மாறுபாட்டை வைத்து ஆப்பிள் இதை துல்லியமாக கணிக்கும். இந்த நிலையில்தான் சிங்கப்பூரில் முகமது பீட்ரி என்ற நபர் இந்த ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்டு உள்ளார். அவர் நேற்று பைக்கில் செல்லும் போது வேன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானார். இதில் வேகமாக தூக்கி வீசப்பட்டவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் இவரின் உடலில் இதய துடிப்பு மாறி உள்ளது. இசிஜி மாற்றம் காரணமாக விபத்து நடந்ததை வாட்ச் கணித்துள்ளது. இதற்கான அலாரம் அடித்தும் அந்த நபர் பதில் எதுவும் அளிக்காத காரணத்தால் விபத்து நடந்ததை வாட்ச் உறுதி செய்துள்ளது. இதனால் உடனடியாக அவரின் உறவினருக்கு அந்த வாட்ச் தகவல் தெரிவித்தது. அதோடு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தது.


ஆப்பிள் வாட்ச் துரிதமாக செயல்பட்ட காரணத்தால் உடனடியாக அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் முகமது பீட்ரி நேற்று காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது இவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார். ஆப்பிள் வாட்ச் ஒருவரின் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *